டிக்டாக், இன்ஸ்டாகிராமுக்கு விடை சொல்லும் நேரம் வந்துவிட்டது… சோஷியல் மீடியாவின் புதிய முகமாக சோரா செயலியை சாட் ஜிபிடி அறிமுகப்படுத்தியுள்ளது!

 உலகளாவிய அளவில் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற வீடியோ மையமான சமூக ஊடக செயலிகள் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இளைஞர்கள் மட்டுமல்லாது, முதியவர்களும் இந்த வகை செயலிகளை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர்.

சோரா செயலியின் மூலம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்க முடியும். இந்த வீடியோக்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்வதற்கும் வசதி உள்ளது. மனிதர்களைப் போலவும், அனிமேஷன் ஸ்டைலிலும் வீடியோக்களை உருவாக்கும் திறன் இந்த செயலியில் இருப்பதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஜெனரேட்டிவ் வீடியோக்கள், உண்மையான வீடியோக்களைப் போலவே தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 'கேமியோ' எனப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமியோவின் உதவியுடன், ஏஐ உருவாக்கிய வீடியோ சீன்களில் நமக்கேற்ப மாற்றங்களைச் செய்யும் சாத்தியமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்வது சாத்தியமாகும். ஆரம்ப கட்டமாக, இது "இன்வைட் ஒன்லி" முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது யாராவது லிங்க் அனுப்பி அழைத்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது, ஐஓஎஸ் இயங்குதளத்தில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மட்டுமே இந்த செயலி கிடைக்கிறது.


இதில் நாம் உருவாக்கக்கூடிய வீடியோக்களை டிக் டாக் , இன்ஸ்டாவில் வருவதை போலவே வீடியோக்களாக நம்மால் பகிர முடியும், மற்றவர்கள் பகிர்ந்த வீடியோக்களை பார்க்க முடியும். நமக்கான வீடியோக்கள் ரெக்கமண்டேஷனும் அதில் கிடைக்கும் .
குழந்தைகள் இந்த செயலி பயன்படுத்தும் போது சில கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் விதிப்பதற்கான வசதியும் இதில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதல் ஒரு வாரத்திற்கு தங்களுடைய ஊழியர்களிடம் இந்த செயலியை வழங்கி மிகத் தீவிரமான பரிசோதனைகளை நடத்தியதாகவும் இந்த செயலியை பயன்படுத்திய பெரும்பாலான ஊழியர்கள் நிறுவனத்திற்கு உள்ளேயே பல்வேறு நண்பர்களை தொடர்பு கொள்ள முடிந்ததாக கருத்து தெரிவித்திருப்பதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது . இந்தியாவில் இந்த செயலி இன்னும் வரவில்லை.


English summary

 Big competition for Tittok & Instagram: open ai reveals Sora AI social media app OpenAI introduced Sora 2, paired with a new social app also called Sora. The app blends generative AI with TikTok-style feeds, letting users create, share, and remix short-form videos featuring themselves and friends.


Comments

Popular posts from this blog

மௌனமாகவே பல ஊழியர்களை பணிநீக்கம் செய்த Accenture… அதிர்ச்சியில் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள்!

உங்களுக்கு சரியாகப் பொருந்துவது எது—ஆயுள் காப்பீடா அல்லது டெர்ம் இன்சூரன்ஸா?