Posts

டிக்டாக், இன்ஸ்டாகிராமுக்கு விடை சொல்லும் நேரம் வந்துவிட்டது… சோஷியல் மீடியாவின் புதிய முகமாக சோரா செயலியை சாட் ஜிபிடி அறிமுகப்படுத்தியுள்ளது!

Image
 உலகளாவிய அளவில் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற வீடியோ மையமான சமூக ஊடக செயலிகள் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இளைஞர்கள் மட்டுமல்லாது, முதியவர்களும் இந்த வகை செயலிகளை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். சோரா செயலியின் மூலம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்க முடியும். இந்த வீடியோக்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்வதற்கும் வசதி உள்ளது. மனிதர்களைப் போலவும், அனிமேஷன் ஸ்டைலிலும் வீடியோக்களை உருவாக்கும் திறன் இந்த செயலியில் இருப்பதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஜெனரேட்டிவ் வீடியோக்கள், உண்மையான வீடியோக்களைப் போலவே தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 'கேமியோ' எனப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமியோவின் உதவியுடன், ஏஐ உருவாக்கிய வீடியோ சீன்களில் நமக்கேற்ப மாற்றங்களைச் செய்யும் சாத்தியமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்வது சாத்தியமாகும். ஆரம்ப கட்டமாக, இது "இன்வைட் ஒன்லி" முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது ...

தங்கம் விலை குறையட்டும் வாங்கிக்கலாம்னு காத்துட்டு இருக்கீங்களா ! உங்களுக்கு தான் இந்த செய்தி!!

Image
  சென்னை: 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது . அதுவும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை தங்கம் விலை நாம் எதிர்பாராத உச்சங்களை எல்லாம் எட்டி இருக்கிறது. தங்கம் விலை: சாமானிய மக்களுக்கு இனி தங்கம் என்பது எட்டாக்கனி என்பதை நிரூபிக்கும் வகையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத பல உச்சங்களை எட்டிவிட்டது. தினமும் செய்திகளில் புதிய உச்சத்தில் தங்கம் என்பதை நாம் காணாமல் இல்லை. ஒரு பவுன் நகைக்கு ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வைக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது. 30 நாட்களில் நடந்தது என்ன: சென்னையை பொறுத்தவரை செப்டம்பர் 1ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9,705 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்தது. அதாவது செப்டம்பர் மாதம் முதல் நாளில் தங்கம் ஒரு சவரன் 77,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இந்த 30 நாட்களில் அதாவது செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10,860 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 86,880 ரூப...

உங்களுக்கு சரியாகப் பொருந்துவது எது—ஆயுள் காப்பீடா அல்லது டெர்ம் இன்சூரன்ஸா?

Image
உங்களுக்கு ஆயுள் காப்பீடு சிறந்ததா அல்லது ட்ரெம் இன்சூரன்ச் சிறந்ததா இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி இங்குக் காணலாம். காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் நீங்கள் சொத்தையும் சேமிக்க முடியும், அதேசமயம் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கலாம். மாதந்தோறும் இன்சூரன்ஸுக்காக ஒரு தொகையை செலுத்துவது சுமையாகத் தோன்றினாலும், அதன் நன்மைகளைப் பற்றி பலருக்குத் தெரியாது. ஆகையால், காப்பீடு எடுக்க நினைத்தால், முதலில் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் இடையேயான வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். Term Insurance Term இன்சூரன்ஸ் அல்லது காப்பீடு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இதில் பாலிசிதாரர் பிரீமியம் செலுத்த வேண்டும், ஆனால் முதிர்வு காலாம் முடிந்த பின்பு அந்தத் தொகை உங்களுக்கு கிடைக்காது. உதாரணமாக, பாலிசிதாரரின் அகால மரணத்தின் போது, காப்பீட்டு வழங்கும் நிறுவனம் பாலிசிதாரர் பரிந்துரைத்துள்ள நாமினிக்கு அந்த மொத்தத் தொகையையும் செலுத்தும். அதே பாலிசிதாரரரான நீங்கள் முதிர்வு காலம் முடிந்தும் நல்ல ஆயுளுடன் இருக்கும்பொழுது அந்த பாலிசி தொகை உங்களுக்குக் கிடைக...

மௌனமாகவே பல ஊழியர்களை பணிநீக்கம் செய்த Accenture… அதிர்ச்சியில் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள்!

Image
சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் முன்னணி ஆலோசனை நிறுவனமான அக்சென்ச்சர் ( Accenture ), கடந்த மூன்று மாதங்களில் உலகளவில் 11,000-க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு ( AI ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கான தேவைகள் குறைந்திருப்பதே இந்த ஆட்குறைப்பின் முக்கிய காரணமாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 865 மில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்சென்ச்சர் தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் மாதங்களில் கூடுதல் பணிநீக்கங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, நிறுவனத்திற்குத் தேவையான திறன்களை ஊழியர்களிடம் உருவாக்க பயிற்சி வழங்குவது சாத்தியமில்லாத சூழ்நிலையில், குறுகிய காலத்துக்குள் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளுக்கான வா...
Image
  இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) தனிநபர்களுக்கு தங்கக் கடன்கள் வழங்கும் செயல்முறைகளுக்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது . இந்த வழிகாட்டுதல்கள் , தங்கக் கடன்கள் வழங்குவதில் ஒரே மாதிரியான கட்டமைப்பு மற்றும் ஒழுங்கமைவான நடைமுறைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன . இதனடிப்படையில் , பிணையாக ஏற்கப்படும் தங்கத்தின் தன்மை , கடன் வழங்கக்கூடிய உச்ச வரம்பு மற்றும் தொடர்புடைய கட்டண விதிமுறைகள் உள்ளிட்ட பல அம்சங்களில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .   உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் தங்கக் கடன் தேசிய மேலாளர் சாஹில் குமார் காபா கூறியதாவது , தங்க நகைகள் மற்றும் ஆபரணங்களை பிணையாகக் கொண்டு கடன் வழங்கும் செயல்முறையில் ஒரே மாதிரியான வழிகாட்டுதலை உருவாக்க ரிசர்வ் வங்கி முயற்சி எடுத்து வருகிறது . வாடிக்கையாளர்களின் கோணத்தில் பார்க்கும் போது , இவ்வகை சீரான வழிகாட்டுதல்கள் , வங்கிகள் அல்லது NBFC- களிடமிருந்து கடன் பெறும் விதிமுறைகள் மற...